சென்னை : தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். தமிழ்நாட்டின் நலனையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் என்றும் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்; தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Advertisement