சென்னை: வண்டலூரில் காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும், பயிற்சி முடித்த காவலர்கள் திறம்பட பணியாற்ற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், காவல் பணி என்பது மக்களின் பிரச்சனைகளை நேரடியாக தீர்த்து வைக்கும் உன்னதமான பணி என அவர் அறிவுரை கூறியுள்ளார். வண்டலூரில் காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழாவில், அணிவகுப்பு மரியாதையை டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்றுக்கொண்டார்.
+
Advertisement