சென்னை: செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி காரணமாக சென்னையில் இன்று காலை 8 மணி முதல் ஆக.1 இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement