சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டார். சட்டவிரோதமாக 6 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்த முகமது அர்ஷத்(46) பிடிபட்டார். சென்னை ஓட்டேரியில் தங்கி இருந்த அவரை உளவுத்துறை போலீசார் இலங்கைக்கு திருப்பி அனுப்பினர். போலி ஆவணம் மூலம் முகமது அர்ஷத் ஆதார் கார்டு பெற்று இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இலங்கையில் உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாக முகமது அர்ஷத் வாக்குமூலம் அளித்தார். புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் முகமது அர்ஷத் லாஜிஸ்டிக் நிறுவனங்களை நடத்தி வந்தது தெரியவந்தது.
+
Advertisement