சென்னை: சென்னையில் ஒரு சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரத்தில் கனமழை பெய்யக்கூடும்.
+