Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கேரளாவில் பள்ளி விடுமுறையில் மாற்றம்?

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பள்ளிகளுக்கான ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல் - மே மாதத்திற்கு பதிலாக மழைக்காலமான ஜூன் - ஜூலைக்கு மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டியுள்ளதால் ஆண்டு விடுமுறையில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்கிறது.