முதலமைச்சர் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டை நோக்கி நாள்தோறும் நிறுவனங்கள் முதலீடு செய்ய படையெடுத்து வருகின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று வெற்றி பெற்றுள்ளோம். உலக அளவில் வர்த்தக போர் நடக்கும் இப்போதைய சூழ்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.
 
  
  
  
   
