தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. திராவிட மாடல் அரசு புதிய தொழில்நுட்பங்களை எப்போதும் வரவேற்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறை சிறந்து விளங்குகின்றது. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன என்றும் கூறினார்.