சென்னை: பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறமாட்டோம். தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை. கூட்டணியில் இருந்து விலகிய காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
+