திருச்சி: திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பில் பறவைகள் பூங்காவை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Advertisement