டெல்லி: ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா -பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது. போட்டி இரு நாட்டிற்கும் பொதுவான இடத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை தொடரை இந்தியா புறக்கணித்த நிலையில் திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிய கோப்பை போட்டி துபாய், அபுதாபியில் நடத்த திட்டமிட்டிருப்பதால் இந்தியா பங்கேற்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement