சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும். இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
+
Advertisement