சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து சிறையில் அடைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரிய மனு ஜூன் 26க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க ஜெகன்மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும். போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யட்டும். விசாரணைக்கு ஜெகன்மூர்த்தி தனியாக செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
+
Advertisement