நாமக்கல்: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் வலிப்பு ஏற்பட்டவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் குமரமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றும் கார்த்தி ( 35) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அருகில் இருந்த சக பணியாளர்கள் அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.
+
Advertisement