கேளிக்கை பூங்காக்களில் நிரந்தர ராட்சத ராட்டினம் இயக்க சுற்றுலாத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்: தமிழ்நாடு அரசு அரசானை
சென்னை: கேளிக்கை பூங்காக்களில் நிரந்தர ராட்சத ராட்டினம் இயக்க சுற்றுலாத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசானை வெளியிட்டுள்ளது. புதிதாக ராட்சத ராட்டினம் அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற வேண்டும். ஏற்கனவே ராட்சத ராட்டினம் அமைத்துள்ளவர்கள் 6 மாதத்துக்குள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற வேண்டும். தற்காலிகமாக ராட்சத ராட்டினம் இயக்க சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கான இணையதளம் விரைவில் உருவாக்கப்படும்