ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி மூவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை அமர்வு நீதிமன்றம்
சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி மூவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை அமர்வு நீதிமன்றம். கோடம்பாகத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் சதீஷ்குமாரின் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிணை வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி கார்த்திகேயன்.


