கோவை: பொள்ளாச்சி ஆழியாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. ஆழியாறு அணை 120 அடியை எட்டியதால் மதகுகள் வழியாக விநாடிக்கு 1,329 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணைக்கு விநாடிக்கு 1,077 கனஅடி நீர் வந்துக் கொண்டு இருக்கிறது.
+
Advertisement