சென்னை: சென்னையில் இருந்து குவைத் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது ஏற்பட்ட இயந்திர கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. விமானி உரிய நேரத்தில் இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால் 191 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து குவைத் புறப்பட்ட விமானத்தில் 185 பயணிகள் உள்பட 191 பேர் இருந்தனர். இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
+