திருவாரூர்: திருவாரூரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக விவசாயிகளுடன் சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய அவர்; அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. விவசாயிகளின் நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது என்று கூறினார்.
+
Advertisement