பெங்களூரு: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (87) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில்
காலமானார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல்வேறு உயர் விருதுகளை சரோஜா தேவி பெற்றுள்ளார். 50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி.