திண்டுக்கல்: ஆடிப்பெருக்கையொட்டி திண்டுக்கல்லில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500க்கும் கனகாம்பரம் ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்பனையான மல்லிகைப் பூ தற்போது கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகிறது. நிலக்கோட்டையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.400க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.900க்கு விற்பனையாகிறது.