Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலச்சரிவு அபாயம்; கத்ராவில் வணிக நிறுவனங்களை அகற்ற உத்தரவு

கத்ரா:ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திரிகூட மலையில் 5,200 அடி உயரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பலத்த மழை,நிலச்சரிவினால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 34 பக்தர்கள் பலியாகினர்.20 பேர் காயமடைந்தனர். இதனால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கத்ராவில் நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை அகற்ற சப் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.