லேண்ட் ரோவர் நிறுவனம், டிபண்டர் டகார் டி7 எக்ஸ்-ஆர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிபண்டர் ஆக்டாவில் உள்ள 4.4 லிட்டர் டிவின் டர்போ வி8 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 8 ஸ்பீடு டார்க்யூ கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 635 எச்பி பவரையும் 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது விற்பனைக்காக உருவாக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு துவக்கத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள உலக ரேலி ரெய்டு சாம்பியன்ஷிப் போட்டிக்காக பிரத்யேகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. பின்புறம் 550 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க், 35 அங்குல டயர்கள் என ரேசிங்கிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கரடு முரடான பாதைகளில் 6,000 கிலோ மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவன வட்டாரங்கள் கூறியுள்ளன.
+
Advertisement

