Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லட்டு சர்ச்சை எதிரொலி : வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!!

திருப்பதி : திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு சர்வதேச அளவில் பிரபலமானது. நடப்பு ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் லட்டு தயாரிப்பதற்கான பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக அறிவித்ததோடு, அதற்கான ஆய்வு அறிக்கையையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, கலப்படமான நெய் பயன்படுத்தப்பட்டதால் இன்று திருப்பதியில் தோஷ நிவாரண சாந்தி யோகம் நடத்தப்பட்டது.யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சன்னதி, லட்டு, அன்னபிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் தெளிக்கப்பட்டது.இந்த நிலையில், அனைத்து பக்தர்களும் தங்களது வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, "ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ" என மந்திரம் படிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்புவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.