லடாக்: லடாக் விவகாரத்தை உணர்வுபூர்வமாக அணுக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு லே நகரில் திடீரென இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். லேவில் உள்ள பாஜக அலுவலகம், காவல் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாதுகாப்பு வீரர்கள் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகி விட்டனர். 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவியது.
லே பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க மாவட்ட ஆட்சியர் 163 தடை உத்தரவு பிறப்பித்தார். லே பகுதியில் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி போராட்டம் நடத்தவோ, ஒன்று கூடவோ கூடாது என உத்தரவிட்டார். இன்றும் 163 தடை உத்தரவு தொடர்கிறது. இதனிடையே லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லடாக் விவகாரத்தை உணர்வுபூர்வமாக அணுக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது