லடாக்: வன்முறையை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் 4வது நாளாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். லடாக்கில் மாநில அந்தஸ்து வழங்க கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. லடாக்கில் வன்முறைக்கு முன்பாக சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளார். வன்முறைக்கு காரணம் எனக் கூறி, போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக்கை கைது செய்தனர்.
+
Advertisement