புதிதாகக் கொண்டுவரப்பட்டு உள்ள 4 தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!
டெல்லி: ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிடப் பாதுகாப்பு சட்டம் ஆகிய 4 தொழிலாளர் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மாறி வரும் பணிச் சூழல்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.


