Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு செய்யப்படவேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து முனையத்தின் இறுதிக் கட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பயணிகளுக்கு செய்யப்படவேண்டிய கூடுதல் வசதிகள் குறித்தும் துறைச் சார்ந்த அரசு உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம் மற்றும் போக்குவரத்து) கே.பவானீஸ்வரி, இ.கா.ப., மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், இ.ஆ.ப., கும்டா சிறப்பு அலுவலர் ஐ.ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர் கே.எம்.சரயு, இ.ஆ.ப., சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநர் கௌரவ் குமார், இ.ஆ.ப., ஆவடி காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சி. சங்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) திட்ட இயக்குநர் எ.சாவித்திரி தேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.