குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையில் நகைக்காக தாய் மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையில் நகைக்காக தாய் மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ல் நகை மற்றும் பணத்திற்காக வசந்தா(64), அவரது மகள் தேன்மொழி)(32) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கு தொடர்பாக தேன்மொழி வீட்டில் வேலை செய்த பெண் சத்யா, தவ்லத்பேகம், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


