கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் கூடுதல் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!!
டெல்லி: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் கூடுதல் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஜூலை 16ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தன. 3ம் நபர் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
 
 
   