Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியமைக்காக குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர் விருது’: முதல்வர் வழங்கி கவுரவித்தார்

சென்னை: தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களாக இருந்த சங்கரய்யா, நல்லகண்ணு, திராவிட கழக தலைவர் வீரமணி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், 2024ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’க்கு இலக்கிய செல்வர் குமரி அனந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திர போராட்ட தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக கடந்த 1933 மார்ச் 19ம் தேதியன்று பிறந்தவர். காமராஜரின் சீடராக விளங்கியவர்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உடனிருந்தார்.