துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இதுவரை, 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 19, ஒரு நாள் போட்டிகளிலும், 7 விக்கெட்டுகள் டி20 போட்டிகளிலும் வீழ்த்தியவை. குல்தீப் யாதவ், இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைப்பார். இந்த சாதனைப் பட்டியலில், ரவீந்திர ஜடேஜா 29 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். ஜடேஜா, ஒரு நாள் போட்டிகளில் 25 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
+
Advertisement