போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிகோபர் மாநில கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் பல்வேறு நபர்களுக்கு கடன்களை வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளரிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கடந்த மாதம் 25ம் தேதி மோசடி தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வங்கியில் கடன் முறைகேடு வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி குல்தீப் ராய் சர்மாவை சிஐடி போலீஸ் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். தேவைப்பட்டால் அவரது உடல்நிலை குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.