உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று (22ம் தேதி) பகல் 11 மணிக்கு காளிபூஜை, மாலை 5மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மாலை 5.30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7மணிக்கு வில்லிசை நடக்கிறது.
நாளை (23ம் தேதி) அதிகாலை கொடி பட்டம் ஊர்வலத்தை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தினமும் காலை 7.30மணி, காலை 9மணி, காலை 10.30மணி, பகல் 12மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 3மணி முதல் இரவு 10மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.10ம் திருவிழாவான அக்டோபர் 2ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.