சென்னை: சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் மரக்கட்டைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கக்கூடிய காந்திநகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான மரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ஜன்னல், கதவு, கட்டில் செய்யது விற்பனை செய்துவருகின்றனர். இந்த கடையில் கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு ரமேஷ் மற்றும் அவர் ஊழியர்கள் சென்றனர். இன்று காலையில் கடையை வந்து பார்த்த போது எதிர்பாராதவிதமாக மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக கூடுவாஞ்சேரி பகுதியில் புகைமூட்டமா ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் ரூ.75லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதடைந்துள்ளதாக கடை உரிமையாளர் ரமேஷ் தெரிவித்தார். காலையில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.