புதுடெல்லி: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தலா 1000 மெகாவாட் திறன்கொண்ட முதல் இரண்டு உலைகள் முறையே கடந்த 2013 மற்றும் 2016 ம் ஆண்டுகளில் இந்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டன. மேலும் நான்கு உலைகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரஷ்ய அதிபர் புடின் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மூன்றாவது அணு உலைக்கான முதல் தொகுதி அணு எரிபொருளை ரஷ்யா சப்ளை செய்துள்ளது. இந்த எரிபொருள் சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக, ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோஸாடோம் தெரிவித்தது. அணு உலைகளுக்குத் தேவையான, மேம்படுத்தப்பட்ட அணு எரிபொருள் ரஷ்யாவிலிருந்து சரக்கு விமானங்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

