சென்னை: கடலூர் ஸ்ரீபாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பட்டியலின மக்களை தடுத்தால் நடவடிக்கை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கடலூரில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. விழாவில் பட்டியலின மக்கள் கலந்து கொள்வதை தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இருக்க வேண்டும். அனைவரும் கடவுளிடம் தங்கள் பிரார்த்தனைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தேவையான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement