கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வினாடிக்கு 50,000 கன அடி திறக்கப்பட்ட நிலையில், 80,000 கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. ஆற்றில் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ கூடாது என அறிவுறுத்தல் மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 14,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து ஒருலட்சம் கன அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டனர்.