விருதுநகர்: புதிய தமிழகம் கட்சி மாநில மாநாடு ஜன.7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், தலைவருமான கிருஷ்ணசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
ஆமத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் அனுமதியை மீறி நேற்று அதிகாலை 1 மணி வரை ஒளி-ஒலி அமைத்து கிருஷ்ணசாமி பரப்புரை மேற்கொண்டார். இதுதொடர்பாக ஆமத்தூர் எஸ்ஐ அஜீஸ் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் குணம், வடக்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி ஆகியோர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
