Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரியில் வரும் 24ம் தேதி திமுக வர்த்­த­கர் அணி அமைப்­பா­ளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம்: மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு

சென்னை: திமுக வர்த்­த­கர் அணி அமைப்­பா­ளர், துணை அமைப்பாளர், தலைவர்கள் கூட்டம் கிருஷ்ணகிரியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவித்துள்ளார். திமுக வர்த்­த­கர் அணி செய­லா­ளர் காசி முத்­து­மா­ணிக்­கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக வர்த்­த­கர் அணி மாவட்ட, மாநில அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் மற்­றும் தலை­வர்­கள் கூட்டம் வரும் 24ம் தேதி (ஞாயிற்­றுக்­கி­ழமை) காலை 11 மணி அள­வில் கிருஷ்­ண­கிரி, தேவராஜ் மகா­லில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் திருச்சி சிவா எம்பி சிறப்புரையாற்றுகிறார். வர்த்­த­கர் அணி துணைத் தலை­வர்­கள் கோவி.செழி­யன், பழஞ்­சூர் கே.செல்­வம், எஸ்.மோகன், வர்த்­த­கர் அணி இணைச் செய­லா­ளர்­கள் மாலை­ராஜா, வி.ஜெயன், கோவை நா.முரு­க­வேல், பி.டி. பாண்­டிச்­செல்­வம், எஸ்.முத்துச்செல்வி, என்.தாம­ரை­பா­ரதி, எஸ்.ஆர்.எஸ். உம­ரி­சங்­கர், வர்த்­த­கர் அணித் துணைச் செயலாளர்­கள் ஐ.கென்­னடி, டி.ஆர். முத்­துச்­சாமி, எம்.எஸ். அசோக் பாண்­டி­யன், மீஞ்­சூர் கே.ஜி.பாஸ்­கர்­ சுந்­த­ரம், சிவ­காசி த.வன­ராஜ், வி.பி. மணி, இ.ராமர், க.தன­செல்­வம்,

பெ. சுந்­த­ர­வ­ர­தன், வே. பல்­ல­வி­ராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.தர்­ம­செல்­வன், ஆ.சத்­தி­ய­மூர்த்தி, குன்னம் ராஜேந்­திரன், கிருஷ்­ண­கிரி கே.வி.எஸ்.சீனிவாசன், கிருஷ்­ண­கிரி பி.டி.அன்­ப­ர­சன் ஆகி­யோர் முன்னிலை­ வகிக்கின்றனர். இக்­கூட்­டத்­தில் மாவட்ட மற்­றும் மாநில அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்பா­ளர்­கள், தலை­வர்­கள் அனை­வ­ரும் தவ­றாது கலந்து கொள்­ளு­மாறு கேட்­டுக் கொள்­கி­றேன். இந்த கூட்டத்தில் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் வர்த்­த­கர் அணி பட்­டி­யல் பெறு­தல் மற்­றும் திமுக அணி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.