செப்.11, 12-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: செப்.11, 12-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒசூரில் 11ம் தேதி காலை 11.45 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். பிற்பகல் 1.15 மணிக்கு எல்காட் பூங்காவில் அசென்ட் சர்க்கியூட் நிறுவனத்துக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மாலை 5.30 மணிக்கு குருபரபள்ளியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.