கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வந்திருக்க கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராயக்கோட்டை மேம்பாலம் முதல் சென்னை பைபஸ் சாலை வரை சாலையின் 2 பக்கங்களில் இருந்தும் மக்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஒசூர் வந்தார். பின்னர் ஒசூரில் இருந்து சாலை மார்க்கமாக கிருஷ்ணகிரி நோக்கி சென்ற போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் நின்று உற்ச்சாக வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து ரோட்ஷோ என்ற வகையில் ஆங்காங்கே இறங்கி மக்களிடம் பேசி விசாரித்து வருகிறார். ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து பேரறிங்கர் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளுக்கு சுமார் 6 கி.மீ தூரம் ரோட்ஷோ மூலம் வந்தார். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு வழங்கினார். இந்த விழாவில் 2,23,013 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.