அண்ணாநகர்: பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கோயம்பேடு பசுமை பூங்கா திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் சுமார் 3.59 ஏக்கர் பரப்பளவில் 8.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யோகா மையம், நடைபயிற்சி பாதை மற்றும் ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் திறப்பு விழா நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; பசுமை பூங்கா பணிகள் தற்போது முழுமையடைந்துள்ளது. தமிழக அரசு தேதி அறிவித்தவுடன் பசுமை பூங்கா திறக்கப்படும் என்று கேள்விபட்டோம். ஏற்கனவே மே மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். எனவே, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.