கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நாளை மறுநாள் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழக முழுவதும் அனைத்து பூஜை பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. கோயம்பேடு பூ சந்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடக, கேரளா உட்பட பல்வேறு இடங்களிலும் பூக்கள் கொண்டுவரப்பட்டு மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் பொறுத்தவரை சுபமுகூர்த்த நாட்களில் மற்றும் பண்டிகை நாட்களில் அதிகளவில் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சாமந்தி நேற்று ரூ.220க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் மல்லிப்பூ நேற்று கிலோ ரூ.350க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது இன்று ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கனகாம்பரம் நேற்று ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் அதே விலை தான் நீடிக்கிறது.
அதே போல பழங்களின் விலையும் கணிசமாக கூடுகின்றன. நேற்று ரூ.140க்கு விற்பனையான ஆப்பிள், இன்று ரூ.160கு விற்பனை செய்ததாகவும். ஆரஞ்சு ரூ.60க்கு இருந்து ரூ.80க்கு வரை விற்பனை செய்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பொறுத்தவரை கோயம்பேடு சந்தையில் இருந்து தான் பல சிலரை வியாபாரிகளும், தங்களுடைய இடங்களுக்கு பூக்களையும், காய்கறிகளையும், பழங்களை எடுத்து செல்வார்கள். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல இடங்களிலும் தற்போது விற்பனை கலைக்காட்டி இருக்கிறது.
கோயம்பேடு சந்தையின் புறநகர் பகுதி இருக்கக்கூடிய பல்வேறு சாலைகளிலும், தென்னைமரம் ஓலை கூரைகள் அதிகமாக இங்க கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதையும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்து இருந்து வாங்கி செல்கிறார்கள். பூக்களை பொறுத்தவரை கணிசமாக வரக்கூடிய ஓசூர், ஆந்திரா மாநிலத்தில் பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும். பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.