கோவை : கோவையில் நூலகம், அறிவியல் மையம் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "கோவையின் அடையாளமாக செம்மொழி பூங்கா மாறும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை நேரில் ஆய்வுசெய்ய மாவட்டந்தோறும் ஆய்வுசெய்கிறேன். மாவட்ட வாரியான ஆய்வை முதலில் நான் கோவையில்தான் மேற்கொண்டுள்ளேன். செந்தில் பாலாஜியின் வேகமான செயல்பாடுகளை முடக்க தடைகளை ஏற்படுத்தினார்கள். தடைகளை உடைத்து மீண்டு வந்த செந்தில் பாலாஜி, கோவை வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்.கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படும்,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement