வோன்: கொரியா ஓபன் பேட்மின்டன் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று, இந்திய வீரர்கள் ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ், எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறினர். தென் கொரியாவின் சுவோன் நகரில் கொரியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில், இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூர் வீரர் கீன் யெ லோவிடம், 14-21, 22-20, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், முதல் செட்டில் 8-16 என்ற புள்ளிக் கணக்கில் பின்னடைவில் இருந்தபோது, காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். 3வதாக நடந்த மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் லி யாங் சு மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய யாங் சு, 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். நேற்றைய போட்டியில் ஆடிய 3 இந்திய வீரர்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினர்.
+
Advertisement