*சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
நீடாமங்கலம் : கொரடாச்சேரி அருகே குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின்கங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமுகக்குடி ஊராட்சியில் உள்ளது அரசமங்கலம் அருகில் லிங்கத்திடல் என்ற குக்கிராமம்உள்ளது.
இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தெருக்களிலும், சாலையோரம் மற்றும் விவசாயப் பகுதிகளிலும் மின் கம்பங்கள் சாய்ந்தும் மின் கம்பிகள் கீழே ஆபத்தான நிலையில் தொடும் அளவிற்கு தொங்கி கொண்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக கொரடாச்சேரி மின்துறை அலுவலகத்தில் பலமுறை பல ஆண்டுகளாக தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சாலையில்தான் அப்பகுதி,மக்கள் மற்றும்,பள்ளி கல்லூரி,மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே லிங்கத்திடல் கிராமத்தில் தெருப்பதியிலும் ,சாலை மற்றும் விவசாயப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் சாய்ந்து கொண்டிருக்கும் மின் கம்பத்தையும்,சாலையில் தொங்கி கொண்டுள்ள மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.