Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடி முதல்வராகவில்லை.. கூவத்தூரில் வாக்களித்துதான் எடப்பாடி முதல்வரானார்: டி.டி.வி. தினகரன் காட்டம்!!

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக எடப்பாடி பழனிசாமியை புறக்கணிப்பார்கள் என டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பாஜக காப்பாற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள்தான். பாஜகவுக்கு நன்றி செலுத்தவே கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர்தான் எடப்பாடி. துரோகத்தை தவிர எதுவும் தெரியாத பழனிசாமி நன்றியை பற்றி பேசுகிறார் என அவர் கூறினார்.

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வராக காரணம். நான்தான் முதல்வர் வேட்பாளர் என தெரிந்தால் கையெழுத்து போடமாட்டார்கள் என கூறியவர் பழனிசாமி. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போட்டபிறகு முதல்வர் வேட்பாளராக என்னை அறிவியுங்கள் என கூறினார். எடப்பாடி பழனிசாமி பொய்மூட்டை பழனிசாமி எனவும், நன்றிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தமில்லை எனவும் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. ஆட்சியை காப்பாற்றிய 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தவர் எடப்பாடி. தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராக எடப்பாடி ஆகவில்லை. ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவால் ஆட்சியை தக்க வைத்தவர் பழனிசாமி. டெல்லி சென்று திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி. நீங்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் வர வாய்ப்புள்ளது என எங்களுக்கு நம்பிக்கை தரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக எடப்பாடி பழனிசாமியை புறக்கணிப்பார்கள். செங்கோட்டையனை யாருடைய கைக்கூலி என பழனிசாமி கூறுகிறார். அதிமுகவின் 20 சதவீதம் வாக்கு, வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையப்போவதை பார்க்கத்தான் போகிறீர்கள் என டிடிவி தினகரன் கூறினார்.