*கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி : கூசாலிபட்டியில் ரூ.6 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகத்தை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கூசாலிபட்டி ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி நடைபெற்றது.
இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் குழாயை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், பழனிசாமி, போடுசாமி, முன்னாள் பாசறை செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.