Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கொள்ளிடம் அருகே தோட்டக்கலைதுறை பயிர்களை கலெக்டர் ஆய்வு

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே தோட்டக்கலை பயிர்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லவிநாயகபுரம், முதலைமேடு ஆகிய கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் கடந்த 2024-25ஆம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செண்டுமல்லி பயிர் ரூ.9,600 மானியத்தில் நடவு செடிகள் வழங்கப்பட்டது.பின்னர் பயிரிடப்பட்டு அறுவடை நடந்து வருவதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று அப்பகுதி விவசாயிகளிடம் செண்டுமல்லி சாகுபடி உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.

அப்போது, மல்லி பயிர் சாகுபடி செய்த விவசாயி கூறுகையில்; நான் செண்டுமல்லி சாகுபடி செய்ததால் தினசரி வருமானம் கிடைக்கிறது. செண்டுமல்லி வளர்ப்பதனால் பூச்சி நோய் தாக்குதல் குறைந்து பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது.

நான் கொள்ளிடம் வட்டாரத்தில் சொந்தமாக பூக்கடை வைத்துள்ளேன். நான் அறுவடை செய்யும் பூக்களை என் சொந்த கடை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள பூக்கடைகளுக்கு நேரடியாக விற்பனை செய்து தினசரி நல்ல வருமானம் கிடைக்கிறது.

விவசாயிகள் கூறினார். அதனைத் தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரம் முதலைமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறையின் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்தூண் பந்தல் ரூ.30,000-மானியத்தில், விவசாயிகள் பாகல் சாகுபடி செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பார்சல் சாகுபடி விவசாயி கூறுகையில்; காய்கள் நல்ல திறட்சியாகவும் அதிக மகசூல் கிடைக்கிறது. நிரந்தர பந்தல் சாகுபடியால் பராமரிப்பும் இலகுவாக உள்ளது.

பாகல் சாகுபடி எந்த நிலையிலும் நஷ்டத்தை கொடுப்பதில்லை. அதனால் அதிக விவசாயிகள் பாகல் சாகுபடியை விரும்புகின்றனர் என்றார்.

இதில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சந்திர கவிதா, உதவி இயக்குனர் சுரேஷ், தாசில்தார் அருள்ஜோதி, கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சன், உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.